2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் 25 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,006,097 ஆக பதிவாகியுள்ளதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.
மேலும், மே மாதத்தில் மே 25 வரை மேலும் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post Views: 71