துருக்கியில் 298 ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் கைது!

ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 298 பேரை துருக்கிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக, அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உட்பட 47 மாகாணங்களில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேககத்துக்குரியவர்கள், ஐஎஸ்ஐஎஸ்_க்கு நிதியளித்தல் மற்றும் அதன் சார்பாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட்ட தீவிரமான பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளின் போது, பல உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில் துருக்கியின் அரசு, அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை, ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

சிறப்புச் செய்திகள்