நீங்கள் 9, 18, 27 எண்ணில் பிறந்தவர்களா?

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர்.

அறிவாற்றல் மிக்கவர்கள். புகழை விரும்புவர் . தங்களை பற்றி எந்நேரமும் புகழ்ந்து கொண்டே இருப்பார் . பெருமை மிக்கவர்களாக இருப்பர் .

கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர்.

கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள்.

அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.

மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும் போது கவனம் தேவை.

திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர்.

அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்; தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.

எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும்.

சிறப்புச் செய்திகள்