நீங்கள் 4,13,22,31 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை. இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள்.

சட்டையை மாற்றுவது போல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர்.

விசேடமாக 4 , 13 ந் திகதியில் பிறந்தவர்கள் , இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.
.
22 , 31 ந் திகதில் பிறந்தவர்கள் , தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை… அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது.

சிறப்புச் செய்திகள்