6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் , இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.
எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர். எதற்கும் அஞ்சாத இவர்கள் மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.
தங்களுக்கு பிடிக்காதவர்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள் . இவ்வெண்ணில் பிறந்தவர்களுக்கு ரோஷம் அதிகமே .
இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், கவிதை காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமே இருக்கும் . உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3 , 1 , 9 , 2 ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.