அனுரவிற்கு தெரியுமா சீ.வி.கேயின் விளையாட்டு

சீ.வீ.கே.சிவஞானம் ஐயா வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக பதவி வகித்த காலங்களில் வழங்கப்பட்ட அரச வரப்பிரசாதங்களான
அவருக்கான சம்பளம்,

75 000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான (Land Cruiser )வாகனம்,
எரிபொருள் கொடுப்பனவு 35 000 ஆயிரம் ரூபாய்
சாரதி,
வாகன பராமரிப்பு
தங்குமிடம்(விடுதி)
அலுவலக ஆளணி செலவு 15 000 ஆயிரம் ரூபாய்
அலுவலகம் போன்ற சலுகைகளை மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை 07 வருடங்களாக அவர் அனுபவித்து வருகின்றார்.

இதனால் என்ன பிரயோசனம் முன்னாள் ஜனாபதிகள் போன்று இவருக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களால் பலகோடி ரூபாய் அரச நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதுடன் செய்யப்பட்டும் வருகின்றது.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “நாட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில்” அவைத்தலைவர் என்ற போர்வையில் இடம் பெறும் இந்த பண வீண்விரயத்தினை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்தை சமமாக பயன் படுத்தும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் விடயத்தினை கருத்தில் எடுத்தது போன்று ஜனாதிபதி குறித்த அவைத்தலைவர் விடயத்தையும் கையிலெடுத்து.

நடவடிக்கை எடுப்பதனூடாக பல கோடி ரூபாய்களை நாட்டின் நலனுக்காக மீதப்படுத்தலாம் இதனால் ஏழை எளிய மக்களுக்கு நன்மை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு தனிமனிதர் ஒருவருக்கு அரச சிறப்புரிமை என்ற போர்வையில் இவ்வளவு நிதிகளை செலவு செய்வதால் யார் நன்மையடைகின்றனர்?
இதனால் அரசுக்கோ மக்களுக்கோ கிடைக்கும் பயன்கள் என்ன? ஒன்றுமில்லை எனவே குறித்த விடயத்தை ஆராய்ந்து ஜனாதிபதி அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பான மக்களே இத்தனை வருடங்களாக இவர் அனுபவித்து வரும் வரப்பினசாதங்கள் பற்றி வாக்கு போட்ட மக்களாகிய உங்களுக்கு தெரியுமா ? இவருக்கு வாக்களித்ததால் மக்களாகிய நீங்கள் இவரிடம் இருந்து பெற்ற நன்மைகள் என்ன? ஆனால் இவர் மக்களாகிய நம்மிடமிருந்து பெற்ற நன்மையை பார்த்தீர்களா?
மாகாண சபை ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து கலைக்கப்பட்டு இன்றுவரை பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் இந்த வரப்பிரசாதங்களை அனுபவித்து வருகின்றார்.

இதற்காக பலநூறு கோடி ரூபாக்கள் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்டு வருகின்றது. நம்மிடம் பெற்ற வாக்கையும், எமது வரிப்பணத்தையும் தனிமனிதருக்கு இவ்வாறு செலவு செய்வது இந்த நாட்டின் வங்குரோத்துக்கு காரணம் எனவே இப் பணவீண்விரயமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது இதனை அரசு பார்த்துக் கொண்டு இருக்க க்ஷகூடாது.

மக்களே இவ்வாறான சலுகைகளை தொடர்ந்து அனுபவிப்பதற்காகவே தள்ளாடும் வயதிலும் பதவிச் சண்டைக்கான காரணம் தெட்டத் தெளிவாகின்றது.

இவ்வாறான அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் ஒருவர் எவ்வாறு லஞ்சம், ஊழல், வீண்விரயம் பற்றி கதைக்க முடியும்?

வாக்களித்தவர் வீதியிலே வாக்கை பெற்றவர் இலவச அரச விடுதியிலே * இதுதான் மக்களின் அவல நிலை

சிறப்புச் செய்திகள்