இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 177





