நாட்டில் தற்போது நிலவுகின்ற பல்வேறுபட்ட கைத்தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்துப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான மாற்றுப் படிமுறைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கருங்கல் உடைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்து இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தலின் ஏகபோக உரிமை மட்டுப்படுத்தப்பட்ட அரச வியாபார கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை மற்றும் குறித்த வெடிமருந்தின் நீண்டகால விநியோகத்தரான அரச வியாபாரக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிப்பதற்கு இயலாமல் போனமையால் தற்போது நாட்டில் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதனால், குறித்த வெடிமருந்தைப் பயன்படுத்தப்படும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக குறுகிய காலத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் கீழ் துரிதமாக நாட்டுக்கு அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்தை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





