மாவை சேனாதிராச அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன…

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார்.

அத்தோடு நேற்றுமுந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK சிவஞானமும், பதில் செயலாளர் சத்தியலிங்கமும் மாவையுடன் கடும்தொணியில் பேசியிருந்ததாகவும், சுமந்திரன் உங்களை கட்சியில் இருந்து நிச்சயம் நீக்கியே தீருவார் என்று காட்டமாக மாவையிடம் தெரிவித்ததாகவும்
மாவிட்டபுர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்களால் கடும் மனஉளைச்சலில் இருந்த மாவை சேனாதிராச சுயநினைவு இழந்த நிலையில் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின்றன

சிறப்புச் செய்திகள்