ஐஸ்வர்யங்களை தரும் ஐப்பசி மாதம்!

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதமாகும்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடியது என்றால், ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளிக் கொடுக்கும் மாதமாகும்.

சூரியன், துலாம் ராசிக்குள் பயணிக்க துவங்கும் மாதமாகும், புரட்டாசி மாதத்தில் நடத்தாமல் இருந்த திருமணங்கள் நடக்கும் மாதம் ஐப்பசி மாதமாகும்.

அதே சமயம் இது முக்தியை பெறுவதற்கான மாதங்களின் ஆரம்ப மாதம் என்றும் சொல்லப்படுகிறது.

ஐப்பசி மாதம் முருக வழிபாட்டிற்கும், சிவ வழிபாட்டவிற்கும் மிகவும் ஏற்ற மாதமாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐப்பசி மாதம் அக்டோபர் 18 ஆம் துவங்கி, நவம்பர் 15 ஆம் திகதி வரை உள்ளது.

ஐப்பசி மாதம் விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான மாதமாகும். ஐப்பசி பொதுவாகவே முக்திக்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்து மதத்தில் இந்த மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதுடன், இம் மாதத்தில் மாதத்தில் புனித நதியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஐப்பசி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கங்கையில் ஸ்நானம் செய்பவருக்கு பூமியில் உள்ள அனைத்து புனித யாத்திரைகளுக்கும் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று இந்து மதத்தில் கூறப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் தீப தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. பத்ம புராணம், நாரத புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் ஐப்பசி மாதத்தின் சிறப்பு மகிமை விவரிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தொண்டுகள் மற்றும் ஆன்மீக செயல்கள் கடவுளை நேரடியாக சென்றடைவதால், ஐப்பசி மாதம் முக்திக்கான வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி, கந்தசஷ்டி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்