யூரியா 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்

தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா பசளையை கமநல மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

நெற் செய்கைக்காக ஒரு மூடை யூரியா பசளை 10 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

எனினும், தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்