நடிகை அனுபமா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் பைசன் படத்தில் நடித்து இருந்தார்.
அனுபமாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் கசியவிட்டவர்கள் பற்றி சமீபத்தில் அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
கேரள போலீஸ் விசாரித்ததில் அந்த புகைப்படங்களை பரப்பியது தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் என்பது தெரியவந்திருப்பதாக அனுபமா தெரிவித்து இருக்கிறார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்வதாக அனுபமா தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அந்த பெண் பற்றிய விவரங்களை அனுபமா வெளியிடவில்லை.
Post Views: 232





