பலாங்கொட, பின்னவல பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் தனது கழுத்தை வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி முறைப்பாடு செய்த வந்த தந்தை, தாய் மற்றும் மகன் உட்பட பல குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதன்போது ஒருவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கழுத்து மற்றும் கையை வெட்டிக் கொண்டுள்ளார்.
அதனை தடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் காயமடைந்த பலாங்கொட பகுதியை சேர்ந்த 21 வயது நபர், பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் சுதேஷ் நாலக தலைமையில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





