திருகோணமலை – கிண்ணியாவில் முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
அவர்களை நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கிண்ணியா காவல்துறை தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 103





