கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post Views: 200





