எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய உணவு தட்டுப்பாட்டிற்கு தீர்வாக மேல்மாகாணத்தில் 34,000 வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதுதவிர, பயன்படுத்தப்படாத மாகாண சபைக்கு சொந்தமான காணிகள் மற்றும் தரிசு நிலங்களில் விவசாயம் செய்யும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாகாண ரீதியாக உள்ள விவசாய ஆலோசகர்கள் ஊடாக இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு விவசாய ஆலோசகரின் கீழ் 300 வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





