தொடருந்து வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா…

தற்போதைய நெருக்கடி நிலையில் தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகராக தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

பேருந்து பயணக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கை விடவும் குறைவான கட்டணமே தொடருந்துக்கு அறவிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனினும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து தொடருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் பயணக் கட்டணம் குறைவாக உள்ளமையினால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய முடியாமல் உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்