இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்நாட்டு மக்களின் பாவனைக்காக ஒரு தொகை உருளைக்கிழங்கை வழங்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவன் வீரகோனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் சார்க் பொதுச் செயலாளர் எசல ருவான் வீரகோன் ஆகியோருக்கு இடையில் பங்களாதேஷில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு கொவிட் தொற்று பாரியளவில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், உரத் தட்டுப்பாட்டினால் நாட்டின் விவசாய உற்பத்தி 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு நட்பு கரம் நீட்டியதற்காக பங்களாதேஷ் பிரதமருக்கு சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் எசல வீரகோன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்போது, கருத்துதெரிவித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் யுக்ரைன்-ரஷ்யா போர் என்பவற்றுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய உலகளாவிய பொருளாதார மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, உள்நாட்டு விவசாயம் மற்றும் அதன் உற்பத்தி இலக்குகளை உயர்த்த பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





