கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாகவும் நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடிகின்றது அதன் காரணமாக, சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 74,890 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 382,506 ஆக பதிவாகியுள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்