ஜூன் 1ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணத்தை ரயில்வே திணைக்களம் உயர்த்தியுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணம் 30% உயர்த்தப்பட்டுள்ளது.
புகையிரத சேவைகளில் ஏற்படும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை பேருந்துக் கட்டணத்தில் 25% என்றும் அவர் கூறினார்.
புகையிரத திணைக்களம் நாளாந்தம் எரிபொருளுக்காக சுமார் 40 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருந்தாலும், நாளாந்த வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாவாகும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
எரிபொருளுக்கு மேலதிகமாக ஏனைய நடவடிக்கைகளுக்கு நாளாந்தம் 30 மில்லியன் ரூபா செலவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





