தமிழ் நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம்

தமிழ் நாட்டில் உள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்டேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள பிரபல நிறுவனங்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒளடதம், மகிழுந்து உதிரிப்பாகங்கள் உட்பட பல பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் உற்பத்தி செய்யும் இந்த பொருட்களை மீள பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதேவேளை, பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் இலங்கையினை பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் புதிய பிரதமருடன் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்டேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்