பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை தாங்கிய கப்பலொன்று இன்று இலங்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது.
சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலின் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக இந்திய நாணய மதிப்பில் 8.84 கோடி ரூபா பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், 123 கோடி ரூபா பெறுமதியுள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.
இதன் பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி 2 ஆவது கட்டமாக இலங்கைக்கு மேலும் சில நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய நாணய மதிப்பில் 80 கோடி ரூபா மதிப்புள்ள 40 மெட்ரிக் டன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்புள்ள 137 வகை மருந்துகள், 15 கோடி ரூபா மதிப்புள்ள 500 டன் பால் மா ஆகியவை வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தார்.
இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்திய மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.
LIVE: இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தல் https://t.co/rtfiUSCrH7
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022
இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிவாரணப் பொதிகளில் ‘தமிழ் நாட்டு மக்களின் அன்புடன்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





