யுகதனவி தொடர்பில் கலந்துரையாடல்

பாதீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கெரவலப்பிட்டி – யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின்போது, பிரத்தியேகமாக சட்டத்தரணி ஒருவரை முன்னிலையாக்கும் தீர்மானம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் பின்னர், மீண்டும் கூடி, பொருத்தமான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சந்திப்பில் பங்கேற்ற லங்கா சம சமாஜக் கட்சியின் பொது செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பாதீடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த மத்திய குழுக் கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்