இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

9% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சபை கூறியுள்ளது.

கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது வழமையான ஏற்றுமதிக்கு திரும்பியுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்