எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்படுகிறது!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறைந்தது 50 நாட்களேனும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்நிய செலாவணி பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து மசகு எண்ணெய் நாட்டுக்குக் கிடைக்கும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மசகு எண்ணெய் தீர்ந்தமையினால் சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் உற்பத்தி பணிகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததன் பின்னர் அதனை நீண்ட காலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

முன்னதாக 2007 ஆம் ஆண்டு சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்புக்காக ஒரு வாரம் மூடப்பட்டது.

🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்