நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் தொட்டிகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்திசெய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவற்றிற்கான ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய விகாரங்களுக்கான பிரிவின் இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரதிநிதி விம்லேந்திரா ஷாரன் உடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, கடற்றொழில் அமைச்சின் எதிர்பார்ப்புக்கள் அடங்கிய திட்ட வரைபினை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும், அவற்றை உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுசென்று ஒத்துழைப்புக்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





