இன்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டாவிடம் வினவியபோது, தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் மற்றும் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பஸ் கட்டண அதிகரிப்பிற்கு இணக்கம் காணப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், முச்சக்கரவண்டி கட்டணத்தையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீட்டர் கட்டணத்தை பொருட்படுத்தாது, தூரத்திற்கு ஏற்ற கட்டணத்தை சுயமாக தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.
எனினும், பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலன்றி, நீதியான முறையில், முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணத்தை தீர்மானிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





