வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் நீக்கம்!

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்தவாரம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, உந்துருளிகளுக்கு 1,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவிருந்தது.

எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளையும் நீக்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்