இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேநேரம், 36அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு நீர்பாசனக் குளத்தின் நீர்மட்டம் 35அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இரணைமடு நீர்பாசனக் குளத்தின் தாழ் நில பகுதியில், வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர், மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.
அந்த பகுதிகளின் வீதிகளில் பயணிப்போரும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





