கடந்த வாரம் உலகளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 30 டொலராலும், வெள்ளிக்கிழமை 23 டொலராலும் உயர்ந்துள்ளது.
அதன்படி, வார இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,816 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் அதிகரித்த போக்கைக் காட்டுகின்றபோதிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 65