அனுமதிப்பத்திரம் இன்றி லொறியில் 1500 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொகவந்தலாவ பிரதேசத்தில் வைத்து நேற்று 14ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதி யிலுள்ள பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து 1500 கிலோ கழிவுத தேயிலையை ஏற்றிச் சென்ற போது, பொகவந்தலாவ, சப்பல்டன் தோட்டப் பகுதியில், கழிவுத் தேயிலை லொறி கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலை பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்தி லிருந்து பொகவந்தலாவ டின்சின் தேயிலைத் தொழிற்சாலைக்கு 13.02.2022 அன்று கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் கிடைத் துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.
லொறி மற்றும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.