2 நாட்களில் சுமார் 50 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 50 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்கொள்வனவு சபையினால் ஒரு கிலோகிராம் நெல் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் நெற்கொள்வனவு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் முறைமை தொடர்பான யோசனை, அமைச்சரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

நட்டஈட்டை வழங்குவதற்காக 40,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டிற்கமைவாக, பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் 30 வீத செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்