பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது-
இரண்டாவது நிதிசார்ந்த சவால் – இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம்.
பெருந்தொற்று இதனை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது.
அமெரிக்க வர்த்தக ஜாம்பவானும் முதலீட்டாளருமான வரென்பவட் அலை குறையும்போது யார்நிர்வாணமாக நீந்துகின்றார்கள் என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்-பெருந்தொற்று உண்மையான அலையை உருவாக்கியுள்ளது என நான் கருதுகின்றேன்.
இது நாங்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்.
நிலைமையை ஒரளவு ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
ஆனால் நாங்கள் அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்.
வடக்குகிழக்கு மக்களிற்கு அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லை- வாழ்வாதாரம்அபிவிருத்தியையுமே அவர்கள் விரும்புகின்றனர்- மிலிந்த மொரகொட
கேள்வி – இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் பாரம்பரியம் காணப்படுவதற்கு காரணம் தமிழர் விவகாரம்- சமீபத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13வது திருத்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள் –
கேள்வி – இந்தியா எவ்வாறு உதவியது?
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை நாங்கள் நான்கு ஒத்துழைப்பு தூண்களிற்கு குறுகிய காலத்திற்கு இணக்கம் தெரிவித்தோம்.
முதலாவது உணவு மற்றும் மருத்துவ பொருட்களிற்கான அவசர உதவி -சமீபத்தில் நிதியமைச்சருடன் மேற்கொண்ட மெய்நிகர் சந்திப்பின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 1பில்லியன் கடனுதவியை அறிவித்தார்.
இரண்டாவது எங்கள் பெட்ரோலிய விநியோகத்திற்கு உதவுவது கடந்த புதன்கிழமை 500மில்லியன் டொலர் கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது-மற்றையது திருகோணமலை எண்ணெய் குதம் தொடர்பில் இந்தியாவுடன் ஒத்துழைப்பது நாங்கள் எப்படி எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்காக இணைந்து செயற்படலாம் என்பது தொடர்பானது.இது இரண்டாவது தூண்.
மூன்றாவது இந்தியா எப்படி எங்களின் வெளிநாட்டு நாணயபற்றாக்குறை நெருக்கடிக்கு இரண்டு கட்டங்களில் உதவலாம் என்பது தொடர்பானது.
முதலாவது ஆசிய கிளியரிங் யூனியனுக்கான எங்கள் நிலுவை தொகையை இரண்டு மாதங்களிற்கு பிற்போட்டு இந்தியா எங்களிற்கு ஆதரவளித்தது-இது 500 மில்லியன்
மற்றையது 400மில்லியன் பரிமாற்றம் ( ஸ்வாப்)
நான்காவது தூண் முதலீடு- நான் சுற்றுலாத்துறையை சேர்த்துக்கொள்வேன்-இந்தியாவே எங்களின் மிகப்பெரிய சுற்றுலா சந்தை என்பதால் .
பெருந்தொற்றிற்கு முன்னர் 20 முதல் 25 வீதமான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்தனர்
இரண்டு நாடுகளிற்கும் இடையில்இது ஒரு விவகாரமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்-செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பினை உருவாக்குவதற்காக தான் உருவாக்கியுள்ள நிபுணர் குழு குறித்து குறிப்பிட்டார்.அதனை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் விவாதத்திற்கு சமர்ப்பிப்பேன் என அவர்தெரிவித்தார்.
அவருக்கு இதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என நான் கருதுகின்றேன்-
எனதுவாழ்க்கையில் இது தொடர்பான பல விடயங்களில் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு பகுதிகளிற்கு சென்றவேளை அவர்கள் அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமாக இல்லை என்பதை நான் அவதானித்தேன்.
அவர்கள் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையுமே விரும்புகின்றனர்-அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை அடிப்படையாக வைத்தே செயற்படவேண்டும்.
இரண்டு விடயங்களில் ஒத்துழைப்பு இடம்பெறலாம் என நான் கருதுகின்றேன்-
ஒன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்கும் யோசனை தொடர்பானது- இரண்டாவது வடக்குகிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யவேண்டும் என்பது தொடர்பான புரிந்துணர்விற்கு வருவது .
ஏனென்றால் மக்கள் நாங்கள் அரசமைப்பு குறித்து தீர்மானிக்கும் வரை தங்கள் வாழ்வாதாரம் எதிர்காலத்திற்காக காத்திருக்கப்போவதில்லை-
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com