பிக் பாஸ் 9ம் சீசனில் இருந்து நேற்று திவாகர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றி வந்த விஜய் சேதுபதி இறுதியில் கனி மற்றும் திவாகர் ஆகியோர் லிஸ்டில் இருந்தனர்.
அதில் திவாகர் எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி அறிவித்தார். அவரும் மகிழ்ச்சியாக வீட்டில் இருந்து கிளம்பினார். பார்வதி மட்டும் கதறி கதறி அழுதார்.
திவாகர் மொத்தம் 42 நாட்கள் பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இருக்கிறார். அவருக்கு சம்பளமாக ஒரு நாளுக்கு 12 ஆயிரம் ரூபாய் தரப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதனால் அவர் மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
Post Views: 128





