பிக் பாஸ் சீசன் 9 தமிழிலிருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன் வெளிவந்த தகவலின்படி, பிக் பாஸ் 9ல் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் கனி வெளியேற்றப்பட்டுள்ளார். கனி வெளியேறியது எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதை தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷன் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எலிமினேட் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கனி வெளியேறியதை தொடர்ந்து வாட்டர்மெலன் ஸ்டாரும் வெளியேறியுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கமல்ஹாசன் சொல்வதை போல், ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Post Views: 209





