பிக் பாஸ் தமிழ் 9ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இதை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த ஷோ மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும், அதை தடை செய்யாவிட்டால் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டம் செய்யப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து இருந்தார்.
சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அருகில் இருக்கும் பிக் பாஸ் வீடு செட் அருகில் அவர்கள் வந்துவிட கூடாது என்பதற்காக போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
Post Views: 161





