மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்,தகுதிப்பெற்ற தென்னாபிரிக்க அணி!

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றையதினம்(29) இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி Laura Wolvaardt 169 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் Sophie Ecclestone பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 320 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி முதன் முறையாக உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்