18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்!

தற்போது செவ்வாய் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 27 ஆம் திகதி செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசிக்கு மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 10 ஆம் திகதி நுழையவுள்ளார்.

இதனால் விருச்சிக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்போது செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஊடகம், எழுத்து, தகவல் தொடர்பு போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். தன்னம்பிக்கையும், தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்