யாழ்ப்பாணத்தில் பிறந்து 13 நாளேயான குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 9ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

பின்னர் அன்றைய தினமே தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த குழந்தை கடந்த (21.10.2025) உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அந்த விசாரணை அறிக்கையில் குடல் இறக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்