கிளிநொச்சி பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை!

கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

அக்கராயன்குளம் – ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபர், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்