சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான செவ்வந்தி நெருங்கிய உறவால் செய்யப்பட்ட சூழ்ச்சி,புலனாய்வாளர்களிடம் சிக்கிய இரகசியங்கள்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு தனது நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி, அதாவது சிங்களப் புத்தாண்டில், பாதுகாப்பு கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, தொடங்கொடவிலிருந்து மித்தேனிய பகுதிக்கு அவர் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் செவ்வந்தி, சஞ்சீவ படுகொலை நடந்த சில மாதங்களில் தான் மறைந்திருந்த இடங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் தகவல் வழங்கியுள்ளார்.

சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், புத்தாண்டைக் கொண்டாட மித்தெனியவில் சுமார் இரண்டு வாரங்கள் கழித்ததாகவும் செவ்வந்தி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விசாரணையில், செவ்வந்தி பயன்படுத்திய வாடகைக்கு எடுக்கப்பட்ட கார்கள், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரான மதுகம ஷான் என்பவர் தொடர்பிலும் இஷாரா தகவல்களை வழங்கியிருந்தார்.

ஒரு மறைவிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பயன்படுத்தப்பட்ட இந்த வாடகை வாகனங்கள் குறித்து பொலிஸார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

செவ்வந்தி தலைமறைவான காலகட்டத்தில், செவ்வந்தி வெளிநாடு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பல்வேறு கதைகள் நாட்டில் பரவின. இந்நிலையில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க இதுபோன்ற செய்திகளை உருவாக்கி அவற்றை பரப்புவதில் செவ்வந்திக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்களை புலனாய்வாளர்கள் தற்போது விசாரித்து வருகின்றனர்.

மேலும், சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட பெப்ரவரி 19ஆம் திகதி இரவு, தான் வெலிப்பென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்ததாக செவ்வந்தி பொலிஸாரடம் செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மே மாதம் மாகாண சபைத் தேர்தல் நாளில், ஜே.கே. பாயின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து, அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

அத்துடன், முன்னாள் காதலன் ஒருவரால் கெஹல்பத்தர பத்மேவுக்கு தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், பத்மேவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, சமிந்து தில்ஷான் பியுமங்காவுடன் தனக்கு ஆழமான உறவு இருந்ததாகவும், இந்த நெருங்கிய உறவு, அவரை படுகொலைக்கு உதவ சூழ்ச்சியாக பயன்படுத்தப்பட்டதாகவும் செவ்வந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்