இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, வட-மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த எச்சரிக்கையின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 11 மாவட்டங்களுக்கு இளம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post Views: 304





