போதைக்கு அடிமையானவர்களுக்கு, மறுவாழ்வுத் திட்டம் முடிந்ததும், தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இதனை தெரிவித்துள்ளார்.
போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் முடிந்ததும், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டவுடன் மீண்டும் அவர்கள் போதைப்பொருட்களை உட்கொள்ளத் தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளாதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை போதைப்பொருட்களுக்கான தேவையைக் கட்டுப்படுத்த உதவும் அதே வேளையில், மறுபுறம் விநியோகச் சங்கிலியைக் கட்டுப்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் வட்டகல கூறியுள்ளார்.
Post Views: 313





