அநுராதபுரம் (Anuradhapura) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏழாலையை சேர்ந்த அகிலன் திவ்யா (வயது-31) என்ற பெண்ணும் மற்றுமொரு 60 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்த வாகனம் அநுராதபுரம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வாகனத்தில் பயணித்தவர்களில் இரு பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 08 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு கடை தொகுதிக்குள்ளும் புகுந்துள்ளது.
இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





