நடிகை எமி ஜாக்சனா உடல்எடை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டாரே!

மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி நிறைய போட்டிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இந்த துறையால் தான் அவருக்கு தொடர்பே இல்லாத தமிழ் திரைப்பட உலகம் சினிமாவில் நடிக்க வைத்தது.

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தவர் திருமணம் செய்யாமல் ஆண் குழந்தை பெற்றார்.

ஆனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கும் சமீபத்தில் அழகிய குழந்தை பிறந்தது.

ஏற்கெனவே ஒல்லியாக காணப்படும் நடிகை எமி ஜாக்சன் இப்போது மிகவும் ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்