இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம்!

நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை படம் நாளை திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இப்படத்தை Dawn பிக்சர்ஸ் மற்றும் Wunderbar பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் இரண்டாவது முறையாக நடித்துள்ளார். ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என பலரும் நடித்துள்ளனர். முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இதனால் கண்டிப்பாக இப்படம் மாபெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இட்லி கடை படத்தை பார்த்தவர்கள் அப்படம் குறித்து என்ன கூறியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் இட்லி கடை படத்தை சிலர் பார்த்துவிட்டு பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் சிலரும், சென்சார் குழுவை சேர்ந்தவர்களும் படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக இட்லி கடை படம் மாபெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை திரையரங்கில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கப்போகிறது என்று.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்