நவராத்திரியின் 6ம் நாளில் மகாலட்சுமியின் அருள் பெற வழிபாட்டு முறை!

நவராத்திரியின் 6 ஆம் நாள் என்பது நவராத்திரியில் மகாலட்சுமியை வழிபடக் கூடிய நிறைவான நாளாகும். இதற்கு பிறகு வரும் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களிலும் நாம் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் வடிவமாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் கன்னிகா பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

இது அம்பிகையை நம்முடைய வீட்டை தேடி வரவைக்கும் அற்புமான வழிபாடாகும். அதே போல் அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்கான நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

நவராத்திரியின் 6ம் நாள் என்பது மகாலட்சுமியிடம், நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வேண்டி பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும்.

நவராத்திரியின் 6ம் நாள் வழிபாடு என்பது எப்போதும் தனித்துவமான, விசேஷ பலனை தரக் கூடிய நாளாகும். நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும், என்ன அலங்காரத்தில், என்ன மலர் மற்றும் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

நவராத்திரி 6ம் நாள் வழிபாடு

அம்மனின் வடிவம் – சண்டிகா தேவி

கோலம் – கடலை மாவால் தேவியின் நாமத்தை கோலமிட வேண்டும்

மலர் – செம்பருத்தி

இலை – சந்தன இலை

நைவேத்தியம் – தேங்காய் சாதம்

சுண்டல் – பச்சை பயிறு சுண்டல்

பழம் – நார்த்தம்/ ஆரஞ்சு

ராகம் – நீலாம்பரி

நிறம் – கிளிப் பச்சை

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்