பல்டி திரைப்பட திரை விமர்சனம்!

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷான் நிகம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி என பல பிரபலங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பல்டி எப்படியுள்ளது, பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்திலேயே பஞ்சமி கபடி குழுவை சார்ந்த ஷான் நிகம், சாந்தனு அவருடைய நண்பர்கள் ஒரு கொலை செய்கின்றனர், அங்கிருந்து இவர்கள் யார் என்று படம் தொடங்குகிறது.

பஞ்சமி, பொற்றாமரை இரண்டு கபடி டீம்-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அவர் ஜெட் ஸ்பீடில் வட்டிக்கு விடுபவர். இவருக்கு அவருடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் நாள் என் டீமில் விளையாடுகிறார்களா என்று பஞ்சமி டீம்-டம் கேட்க, கேப்டன் சாந்தனுவும் பணத்திற்காக சரி என்கிறார்.

ஆனால், சாந்தனு ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதிக்க, பணத்திற்காக தற்போது பொற்றாமரை டீம்-ல் விளையாட சம்மதிக்க அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமான, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு கார்-யை தூக்குகிறார்.

அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் சமாதானம் பேச போன ஷான் நிகம், சாந்தனும் மற்றும் அவர் நண்பர்களை அல்போன்ஸ் தாக்க, அங்கு அவரை அடித்து துவைத்து ஷான் நிகம் & கோ கார்-யை எடுத்து வர, அடுத்தடுத்து இவர்கள் பகை எங்கு கொண்டு சென்றது என்பதே மீதிக்கதை.

பல்டி கபடி படம் செம ஸ்போர்ட்ஸ் ட்ராமா என்று அமர்ந்தால், 4 நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் சென்று அவர்களை எங்கெங்கு அழைத்து சென்று எப்படி அவர்களை சுத்த விடுகிறது என்பதை உன்னி எமோஷ்னல் ட்ராமாவாக எடுத்துள்ளார்.

ஷான் நிகம் படம் முழுவதும் அலட்டல், ஆர்பாட்டம் இல்லாத நடிப்பில் அசத்தியுள்ளார், சாந்தனு-வும் மிடுக்கான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் கலக்கியுள்ளார், அதோடு படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

செல்வராகவன் ஜெட் வட்டி விடுபவர், சிரித்துக்கொண்டு பணம் வாங்கியவர்கள் உடையை உருவி அவமானப்படுத்தி காட்டும் வில்லத்தனம் நடிப்பிலும் பாஸ் மார்க் தான், இவர்கள் தாண்டி அல்போப்ஸ், ஜீ-மா கதாபாத்திரம் நல்ல நடிப்பு. அதிலும் இரண்டாம் பாதியில் ஜீ-மா ஆடும் ஆட்டத்தில் 4 நண்பர்கள் சிக்கும் இடம் நல்ல திருப்பம்.

படத்தின் முதல் கதை என்று எதுவுமே இல்லை, போய் கபடி விளையாடுகின்றனர், சண்டை போடுகிறார்கள் இதை தவிற எதுவுமே இல்லாமல் செல்கிறது. இடைவேளை முடிந்து தான் படத்தின் கதையே தொடங்குகிறது.

அதன் பிறகு நண்பர்களுக்குள் நடக்கும் எமோஷ்னல் போராட்டத்தை குறிப்பாக சாந்தனுவால் இவர்கள் பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு கடைசியில் மிகப்பெரிய கூட்டம் இவர்களை கொல்ல வர, கடைசி அரை மணி நேரம் செம பரபரப்பு.

படத்தின் மிகப்பெரும் பலமே சண்டை காட்சிகள், ஷான், சாந்தனு என மெயின் 4 கதாபாத்திரங்களும் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளனர். சாய் அபாயங்கர் இசை மாஸ் காட்சிகளுக்கு நன்றாக இருந்தாலும், சில இடங்களில் காட்சிக்கு ஒட்டாமலே செல்கிறது. ஒளிப்பதிவு பிரமாதம்.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகள் பங்களிப்பு.

சண்டைக்காட்சிகள்.

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கதையே இல்லாமல் நகரும் காட்சிகள்

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்