AK 64 அப்டேட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, அஜித்தின் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தரமான ஃபேன் பாய் சம்பவம் என பலரும் கூறினார்கள். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்துள்ளார். AK 64 படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. அஜித் தனது கார் ரேஸிங் முடித்து வந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்ஏற்கனவே AK 64 படத்தை நான்தான் பண்ணப்போகிறேன் என ஆதிக் உறுதிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

.ஏற்கனவே AK 64 படத்தை நான்தான் பண்ணப்போகிறேன் என ஆதிக் உறுதிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம், AK சார் மாதிரி இல்லாம வேறு யாரவது, விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “கண்டிப்பாக பண்ணலாம் சார், கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரி பண்ணலாம் சார்” என ஆதிக் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்