ஜனநாயகன் கிளைமாக்ஸ் பற்றி கசிந்த தகவல்!

நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. தீவிர அரசியலுக்கு சென்றுவிட்டதால் விஜய் இனி படங்கள் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்ட நிலையில், கடைசி படம் ஜனநாயகன் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஜனநாயகன் கிளைமாக்ஸ் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கிளைமாக்ஸில் விஜய் humanoidகள் உடன் மோதுவது போல காட்சி இருக்கிறதாம். மேலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி சட்டசபை முன் நடப்பது போல தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் ரிலீஸ் ஆகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்